”ஜல்லிக்கட்டு” வீரராக விஜய் சேதுபதி

`விக்ரம் வேதா’ படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்து இருக்கும் படம் ‘கருப்பன்’. அவருக்கு ஜோடியாக தான்யா நடித்துள்ளார். இவர், மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். ‘கருப்பன்’ படத்தின் இயக்குனர் ஆர்.பன்னீர் செல்வம் படத்தை பற்றி கூறுகையில்:–

‘‘கருப்பன் என்பது படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயர். இதில், ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடிக்கும் வீரராக அவர் நடித்து இருக்கிறார். அவருடைய மனைவியாக தான்யா நடித்துள்ளார். கதாநாயகியின் அண்ணனாக பசுபதியும், வில்லனாக பாபிசிம்ஹாவும் வருகிறார்கள். சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். ஒரு கணவன்–மனைவி இடையே உள்ள பேரன்பும், பிரச்சினையும்தான் கதை. கிராமத்து பின்னணியில் கதை சொல்லப்பட்டு இருக்கிறது.’’

விஜய் சேதுபதி கூறியதாவது:–

‘‘பன்னீர் செல்வம் சிறந்த இயக்குனர். அவர் இயக்கிய ‘ரேணிகுண்டா’ படத்தில், ஒரு விலைமாதுவை கூட கண்ணியமாக காட்டியிருந்தார். ‘கருப்பன்’ படத்தில், ஒரு முதல் இரவு காட்சி பாடலை குடும்பத்தோடு பார்க்கும் வகையில், விரசம் இல்லாமல் படமாக்கியிருக்கிறார்.

நான் நடிக்க இருந்த ‘சங்கு தேவன்’ படம் நின்று போனது. அந்த படத்துக்காக மீசை வளர்த்தேன். அதை ‘கருப்பன்’ படத்துக்காக பயன்படுத்திக் கொண்டோம். ‘சங்கு தேவன்’ படத்துக்காக அமைக்கப்பட்ட அரங்கையும், ‘கருப்பன்’ படத்தின் உச்சக்கட்ட காட்சிக்காக பயன்படுத்தி இருக்கிறோம்.’’


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top