ஒரு நாளைக்கு 4 மணி நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்கள்

அண்டிராய்ட் பயன்படுத்தும் முதல் 10 நாடுகளில் ஆப் ஆனி என்ற நிறுவனம் மூலம் இந்த ஆண்டு மே வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் இந்தியர்கள் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் செயலியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

அதில் வெளியிடப்பட்டு உள்ள தகவல்கள் வருமாறு:-

ஆன்டிராய்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் டாப் 5 பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. இந்த பட்டியலில் தென்கொரியா, மெக்சிகோ, பிரேசில், ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. தென்கொரியா, மெக்சிகோ, பிரேசில் மற்றும் ஜப்பான் நாட்டினர் நாள் ஒன்றிற்கு 5 மணி நேரத்திற்கும் அதிகமாக மொபைல் ஆப்ஸ்களை பார்ப்பதில் பொழுதை செலவிடுகிறார்கள்.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதால் தினமும் 4 மணிநேரத்திற்கும் அதிகமாக மொபைல் ஆப்ஸ்களில் மூழ்கி உள்ளனர். குறைவாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் கூட ஒரு நாளைக்கு 1.5 மணி நேரம் செயலியை பயன்படுத்துகின்றனர். அதைவிட கொஞ்சம் அதிகமாக பயன்படுத்துவோர் 2.5 மணி நேரம் வரை செயலியை பயன்படுத்துகிறார்கள். . ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்களையே இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மொபைல் ஷாப்பிங் ஆப்ஸ்களை மட்டும் சராசரியாக ஒரு மாதத்தில் 90 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்துகிறார்கள்.

அதே சமயம் நிதி சார்ந்த ஆப்ஸ்களை சராசரியாக 30 நிமிடங்கள் மட்டுமே ஒரு மாதத்திற்கு இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். நிதி ஆப்ஸ்களை பிரேசில் நாட்டினர் 45 நிமிடங்களும், தென் கொரியா நாட்டினர் 60 நிமிடங்களும் பயன்படுத்துகிறார்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top