கமலுக்கும் எனக்கும் ஒத்த கருத்துக்கள் ஏராளமாக உண்டு அவர் அரசியலுக்கு வர வேண்டும்! எஸ் வி சேகர்

 

 

இன்று கமல் ஹாஸனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய எஸ் .வி சேகர் , கமல் ஹாஸன் நேர்மையானவர். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நடிகர் எஸ்வி சேகர் கூறினார்.

 

இந்த சந்திப்பு குறித்து எஸ் வி சேகர் கூறுகையில், “நானும் கமலும் 40 வருடங்களாக நண்பர்கள். அதனால் அவரை இன்று சந்தித்தேன். சமீபகாலமாக அவர் பல்வேறு அரசியல் கருத்துக்களை கூறி வருகிறார். எனவே அவர் அரசியலுக்கு வர வேண்டும். கட்சி தொடங்க வேண்டும் என்று கூறினேன்.

 

கமல் நேர்மையானவர். அவர் அரசியலுக்கு வருவது நல்லது. தமிழ்நாட்டுக்கு நேர்மையான அரசியல் தலைவர்கள் தேவை.

 

மூப்பனார் அரசியல் கட்சி தொடங்கிய போது படித்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள். அதுபோல் கமல் கட்சி தொடங்கினால் படித்தவர்கள் ஆதரவு அவருக்கு கிடைக்கும். மக்களும் ஆதரவு கொடுப்பார்கள்.

 

எனக்கும் கமலுக்கும் ஒத்த கருத்துக்கள் ஏராளமாக உண்டு. எனவே, அவர் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்,” என்றார் எஸ்வி சேகர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top