சிவகார்த்திகேயன் மிகவும் கலகலப்பானவர் – நயன்தாரா

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வேலைக்காரன்’. இதில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயன் பற்றி நயன்தாரா கூறும்போது, ‘சிவகார்த்திகேயன் மிகவும் கலகலப்பானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் இருந்தால் நேரம் போவதே தெரியாது. வேலைப்பளு தெரியாது. அந்த அளவுக்கு காமெடி செய்து கொண்டே இருப்பார். எத்தனை பக்கம் வசனம் என்றாலும் பத்தே நிமிடத்தில் அதை மனப்பாடம் செய்து நடித்து விடுவார்” என்று புகழ்ந்து இருக்கிறார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top