கர்நாடகாவின் அமைச்சர்கள், அதிகாரிகள் குழந்தைகளை அரசு பள்ளிக்குதான் அனுப்பவேண்டும்- சித்தராமையா

கர்நாடகா மெட்ரோவில் இந்தி பயன்பாட்டிற்கு எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற்றது. கர்நாடகாவில் கன்னட மொழி பள்ளிகளில் கட்டாயம் என்ற நிலையை அடுத்து வங்கிகளிலும் கன்னட மொழி கட்டாயம் என்ற கொள்கையை கையில் எடுக்கப்பட்டது. கன்னட மேம்பாட்டு ஆணையம் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் மற்றும் கிராமிய வங்கிகள் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்தி திணிப்பிற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்து போராடும் என அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். இப்போது கர்நாடகாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் அவர்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிக்குதான் அனுப்பவேண்டும் என்ற கோரிகையும் வலுப்பெற்று உள்ளது.

இந்த பரிந்துரைகளை வெளியிட்டு உள்ள மாநில முதல்-மந்திரி சித்தராமையா, பரிந்துரைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என கூறிஉள்ளார்.

கன்னட மேம்பாட்டு ஆணையத்தின் 7 நபர்கள் கொண்ட கமிட்டியானது 21 பரிந்துரைகளை அம்மாநில அரசிற்கு முன்வைத்து உள்ளது. கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்துவது தொடர்பாக இந்த பரிந்துரைகள் வைக்கப்பட்டு உள்ளது.

“அரசு அதிகாரிகள் அவர்களுடைய குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்பும் போதும், அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த எப்படி ஆர்வம் காட்டுவார்கள்?” என கன்னட மேம்பாட்டு ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது. இப்போதைய கல்வி அமைப்பில் தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளிகளையும் கொண்டுவர இது மிகவும் பயனுள்ள வழிகளில் ஒன்றாகும் என கூறிஉள்ளது கன்னட மேம்பாட்டு ஆணையம். தனியார் ஆங்கிலவழி பள்ளிகளை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு பள்ளிகளிலும் ஆங்கிலம் ஒன்றாம் வகுப்பில் இருந்தே கற்றுக் கொடுக்கவேண்டும்.

கர்நாடகாவில் 2010 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் 1,782 அரசு பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது, அதே காலகட்டங்களில் 3,186 தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. கழிப்பறை, குடிநீர், நூலகம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் என்ற வசதியானது பல பள்ளிகளுக்கு காகிதத்தில் மட்டுமே உள்ளன எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அரசு பள்ளிகளில் அனைத்து பாடங்களுக்கும் போதிய ஆசிரியர்கள் இருக்கவேண்டும் என்பதை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆசிரியர்களுக்கு கற்பித்தல் தவிர்த்து பிற வேலை சுமையை நீக்கவும் அரசிடம் வலியுறுத்தி உள்ளது கன்னட மேம்பாட்டு ஆணையம்.

மாணவ சேர்க்கை குறைவு காரணமாக அருகில் இருக்கும் பள்ளிகளுடன் இணைக்கப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு உள்ளது. அதேபோன்று அரேசே மழலையர் பள்ளியை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையும் அரசுக்கு முன் வைக்கப்பட்டு உள்ளது.

கன்னட மேம்பாட்டு ஆணைய தலைவர் எஸ்ஜி சித்தராமையா பேசுகையில், “அரசு பள்ளிகளில் மழலையர் பள்ளிகள் கிடையாது. நேரடியாக முதலாம் வகுப்பு சேர்க்கையானது நடக்கிறது. எனவே பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கிறார்கள். உடனடியாக அரசு பள்ளிகளில் சிறப்பு மழலையர் பள்ளிகளை தொடங்க அரசு உடனடியாக நடவடிக்கையை எடுக்கவேண்டும்,” என கூறிஉள்ளார். கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கைக்கு தனியார் பள்ளிகளுக்கு பணம் கொடுப்பதை மாநில அரசு நிறுத்த வேண்டும்.

இந்த கல்வி ஆண்டில் 2016-17-ல் இதற்கு ரூ. 930 கோடி கொடுக்கப்பட்டு உள்ளது. வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்கும். தனியார் பள்ளிகளுக்கு சமூக பொறுப்பு இருந்தால் அவர்கள் இலவசமாக கொடுக்கட்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top