நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி: மாணவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி,

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்களாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதா சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நேற்று மாணவ–மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் பிற கல்லூரிகளில் படிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி கோ‌ஷமிட்டனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், ‘மாணவி அனிதாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அனிதாவை நீட் தேர்வுதான் கொன்றது. அதனால் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இதற்கு மத்திய–மாநில அரசுகளே காரணம். எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனே பதவி விலக வேண்டும்‘ என்றனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top