தென்கொரியா அணுகுண்டு சோதனை- உலக நாடுகள் மற்றும் ஐ.நா மௌனம்

சியோல்,

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வந்தது.

இதனால் அமெரிக்கா உலக நாடுகளை வலியுறுத்தி, வடகொரியா மீது பொருளாதார தடையை வித்தக வேண்டும் என்று கூறியது. இதையடுத்து உலக நாடுகள் வடகொரியா மீது கடும் கண்டனம் தெரிவித்தன, ஐ.நா.வடகொரியா மீது பொருளாதார தடை விதித்தது. ஐ.நா.வின் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா நேற்று முன்தினம் 6–வது முறையாக அணுகுண்டு சோதனையை நடத்தியது.

வடகொரியாவின் இந்த செயலுக்கு ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை பதிவு செய்து உள்ளன. வடகொரியாவிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல் வந்தால் ராணுவ ரீதியில் மிகப்பெரிய பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரஸ், ‘‘வடகொரியாவின் அணுகுண்டு சோதனை சர்வதேச கட்டுப்பாடுகளை அத்துமீறும் செயல்’’ என கூறி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதற்கிடையே வடகொரியாவின் அணுகுண்டு சோதனைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் தென்கொரியா ஏவுகணை சோதனை பயிற்சியில் ஈடுபட்டது.

வடகொரியாவின் ஏவுகணை ஏவும் தளத்தை குறிவைத்து, தென்கொரியா ஏவுகணைகளை ஏவி பயிற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா விவாகரத்தில் தென்கொரியா பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருவது வேலைக்கு ஆகாது என விமர்சித்த நிலையில், தென்கொரியா ஏவுகணை சோதனை பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

தென்கொரியாவின் அணுகுண்டு சோதனைக்கு அமெரிக்காவோ, உலக நாடுகளோ, ஐ.நா.வோ எந்த ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top