மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இனப்படுகொலை, மலைப்பகுதிகளில் 30 ஆயிரம் பேர் உணவின்றி தவிப்பு

கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட 90,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர், மியான்மர் இராணுவத்தால் கற்பழிப்பு, கொலைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் மியான்மரில் அவர்கள் பூர்வகுடிகளாக வழுந்ததற்கான சான்றுகள் இருந்தாலும் அவர்கள் குடிபெயர்ந்தவர்கள் என்ற கருது உருவாக்கப்பட்டு அவர்கள் மீது தொடர் வன்முறை நிகழ்ந்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 25-அம் தேதி ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரைவிட்டு வெளியேற வேண்டும் என்று மியான்மர் ராணுவம் கூறியது, இதை அடுத்து மியான்மர் ராணுவம் ரோஹிங்கியா முஸ்லிம் இனத்தவர்கள் மீது வன்முறையை நிகழ்த்தியது. தொடர்ச்சியாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

மியான்மரில் ஜனநாயக ஆட்சியாய் நிறுவியதாக கூறப்படும் சூ கி ஆட்சிக்குவந்த பின்னரும் அவர்கள் மீதான தாக்குதலில் மாற்றம் ஏற்படவில்லை, மோசம்தான் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் இனப்படுகொலைக்கு உலக நாடுகள் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது. இப்போது போராளிகளுக்கு எதிராக மியான்மர் ராணுவம் தாக்குதலை தொடங்கி உள்ளது.ரோஹிங்யா இஸ்லாமியர்கள் குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படும் காரணத்தினால் அவர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது, இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அங்கு வன்முறை காடாக காட்சியளிக்கிறது. வன்முறை சம்பவங்களில் 1000-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவங்கள் நிகழும் இடத்திற்கு மீடியாக்கள் பிரவேசிக்க முடியாத நிலையே நீடிக்கிறது. சேட்டிலைட் புகைப்படங்கள் மக்கள் அங்கு என்ன நிலையில் உள்ளனர் என காட்டுகிறது. இப்போது இதுவரையிலும் 90,000 ரோஹிங்யா இஸ்லாமியர்கள் அகதிகளாக தங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள வங்காளதேச எல்லையை நோக்கி வந்து உள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட சேட்டிலைட் புகைப்படங்கள் காட்டுகிறது.

எல்லையில் மலைப்பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் போதிய உணவு மற்றும் மருத்துவ வசதியின்றி தவித்து வருகிறார்கள் என மனித உரிமைகள் ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு வருடங்களில் மியான்மர் ராணுவம் இரண்டாவது முறையாக இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையை தொடர்ந்து வருகிறது. உயிர்தப்பிக்க விரும்பி கிராமங்களை விட்டு வெளியேறியவர்கள் அங்குள்ள காடுகளில் குழந்தைகளுடன் உள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top