பிரம்மாண்டமான பட்ஜெட்டில் “ஜூங்க” படத்தை தயாரிக்கும் விஜய் சேதுபதி

விரைவில் வெளியாகவிருக்கும் ‘மேற்கு தொடர்ச்சி மலை’ என்ற படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக மற்றுமொரு படத்தை தயாரிக்கிறார் விஜய் சேதுபதி. அதனை, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என்ற படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.

அவருக்கு ஏற்ற வகையில் ‘ஜுங்கா’ கதை தயாரானதும், அவரை சந்தித்து கதையை சொல்லத்தொடங்கினேன்.

கதையை முழுவதும் கேட்டுவிட்டு, சிறிது நேர மௌனத்திற்கு பிறகு, இந்த கதையை நானே தயாரிக்கிறேன் என்று சொன்னார். ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏனெனில் படத்தின் பட்ஜெட் தோராயமாக இருபது கோடியை தாண்டும். அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் படம். அதனால் வேறு தயாரிப்பாளரைக் காட்டிலும் நாமே தயாரிப்பது தான் பொருத்தமானது என்று கூறி அவரே தயாரிக்கிறார்.

 

அறுபது சதவீத படம் பிரான்சிலும், மீதமுள்ள படம் சென்னை, தூத்துக்குடி, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும் படமாக்கத் திட்டமிட்டிருக்கிறோம். படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை சயீஷா சைகல் ஒப்பந்தமாகியிருக்கிறார். அத்துடன் முக்கியமான கேரக்டரில் யோகி பாபுவும் நடிக்கிறார். ‘ஆண்டவன் கட்டளை’ என்ற படத்திற்கு பிறகு யோகி பாபு, இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் படம் முழுவதும் வரும் வகையில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

விஜய் சேதுபதியின் மாஸ் எண்டர்டெயினராக இப்படம் இருக்கும். காமெடி ஆக்ஷன் லவ் என கமர்சியல் அம்சங்கள் அனைத்தும் சரியான அளவில் இடம்பெற்று, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாகவிருக்கிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது. இவ்வாறு இயக்குநர் கோகுல் தெரிவித்தார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தீபாவளி விருந்தாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top