அரியலூர் மாணவி அனிதாவின் மறைவிற்காக நீதி கேட்டு டிசம்பர் 3 இயக்கம் போராட்டம்

 

நீட் தேர்வுக்கு எதிராக தன்னையே பலியிட்டுக்கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின்  மறைவிற்காக நீதி கேட்டு டிசம்பர் 3 இயக்கத்தின் சென்னை மாவட்ட அமைப்பு சார்பாக முழக்கப போராட்டம் நடைபெற்றது.

 

டிசம்பர் 3 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் தீபக் அவர்கள் பேசும் போது
மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு இந்த ஆண்டு நீட் தேர்வால் 117 மருத்துவ இடங்களை இழந்திருக்கிறோம் இந்த ஆண்டு மாத்திரம் அல்ல கடந்த 25 வருடங்களாகவே, மருத்துவ கவுன்சிலிங்கில் , எங்கள் உடலியல் பழுதைக்காட்டி (impairment) கைகால், பாதிக்கப்பட்டோர், பார்வையற்றோர் ,காது கேளாதோர்க்கு மருத்துவ கல்வி உரிமை மறுக்கப்பட்டு வருகிறதென்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பார்வையற்றோர் மற்றும் காதுகேளாதோர் உட்பட பல வகையான மாற்றுத்திறனாளிகள் மருத்துவ கல்வியை தொழில்நுட்ப உதவியைக் கைக்கொண்டு கற்க முடியும் போது, நம்நாட்டு மருத்துவ கவுன்சில் எங்களுக்கு எங்கள் இயலாமையை காரணம் காட்டி மருத்துவக் கல்வி வாய்ப்ப்பை மறுப்பது எந்த வகையில் நியாயம்?

இந்த வருடம் மொத்தம் மாற்றுத்திறனாளிகளிக்கு ஒதுக்கப்படும் 5% இட ஒதுக்கீட்டின் விளைவான 122 மருத்துவ சீட்களுக்கு, 58 மாற்றுத்திறனாளிகள் தான் விண்ணப்பித்திருந்தனர். ஏன் என்ன காரணம? பல்வேறு அன்றாட அணுகுதல் (accessability)பிரச்சனைகளே காரணம். எங்களுக்கு, கழிவரை தொடங்கி வீட்டு படி, பள்ளி கட்டமைப்பு முறை மற்றும் போக்குவரத்து சிரமங்கள் அனைத்தும் ஒவ்வொரு விதமான ஊனத்தின் வகைக்கு வகை பிரச்சனையின் தீவிரம் மாறுபடும் அதுவும் பெண் மாற்றுத்திறனாளியானால் அப்பப்பா சொல்லி விட முடியாது எங்கள் கஷ்டத்தை. அதையெல்லாம் மீறி, தடைகளைத்தாண்டி, விண்ணப்பித்த 58 பேரில், 20 பேர் தான் நீட் தேர்வு எழுதி உள்ளவர்கள். மற்றவர்களை இரக்கமேயில்லாமல் கல்விக்கனவை சிதைத்து அனுப்பியுள்ளார்கள் நம் மத்திய அரசின் கைத்தடிகள்.

 

சரி அந்த 20 பேருக்காவது கிடைத்ததா ? அதுவும் இல்லை் ,அந்த இருபது பேரில் 15 பேருக்கு கையில் ஊனமெனக் கூறி கல்வி வாயப்பை மறுத்திருக்கிறார்கள் இந்த அதிமேதாவி மருத்துவ கல்வி இயக்ககம் மற்றும் மருத்துவர்கள். சரி 117 மருத்துவ சீட்கள் எங்கே போகுது என்ற தரவுகள் உண்டா ,அதை வெளியிடுமா? இந்த மத்திய அரசு!

 

கையில்லாதவர் மருத்துவ கல்வி படிக்க கூடாதா? சரி படித்து மருத்துவம் சொல்லித்தரும் பேராசிரியராகவோ அல்லது ஆராய்ச்சி மேற்கொள்ளக்கூடாதா என்ன!  முடியும்!

அப்போ இயலாமை யாரிடம் என்னிடமா இல்லை தொழில் நுட்பத்தை பயன்படுத்த மறுக்கும மருத்துவ கல்வி இயக்ககத்திடமா?

 

எங்கள் மாற்றுத்திறனாளிளுக்கான இந்த ஒதுக்கீட்டை 1995ஆம் ஆண்டின் எங்கள் சட்டம் கொடுத்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டவுடன் கொடுத்ததா இந்த அரசு? இல்லை 3% இட ஒதுக்கீட்டை வழங்காமல், வெறும் 3 சீட்டை மாத்திரமே வழங்கியது நம்ம சமூக நீதி பீற்றும் தமிழ்நாடு அரசு.

 

 

ராஜா எதிர் தமிழ்நாடு அரசு ,என்ற வழக்கிற்கு பிறகு தான் இந்த ஒதுக்கீட்டை பெற முடிந்தது. அப்படி வழங்கினாலும், முழுமையாக சீட்களை வழங்காமல் ,இங்கே நம் மருத்துவ சமூகமும் ,மருத்துவ குழுமம் மூலமாக 50 முதல் 60 சதவிகிதம் வரை ஊனம் இருப்பவர்களுக்கு மாத்திரம்தான் மருத்துவம் படிக்க தகுதி இருக்கு என்ற வரையறையை உருவாக்கியது எவ்வளவு நயவஞ்சக செயல், அதோடு நில்லாமல் கவுன்சிலிங் நடக்கும் இடத்தில் எங்கள் ஊனத்தை அளப்பதற்கு/அளவீடு செய்வதற்கு ஒரு பிரத்யேக குழு வேறு. ஏற்கனவே ஊனமுற்றோர் சான்றிதழ் வைத்திருக்கும் எங்களுக்கு ஏன் இன்னொரு மருத்துவ பரிசோதனை?

அங்கு எங்களை பரிசோதித்து 50% விழிக்காடு இருந்தால் 40% கீழாக கொண்டு வருவது, இல்லையெனில் 60% க்கு மேல் கொண்டு சென்று தகுதியிழக்கச்செய்வது. அப்படி இழக்கச்செய்த  திவ்யா என்ற மாற்றுத்திறனாளிக்கு உச்ச நீதிமன்றம் வரை போராடி சென்றுதான் சீட்டைப்பெற்றோம்.

 

இவ்வளவு பிரச்சனைகளை சந்திக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இப்போது நீட் தேர்வு வேறு!

 

வாய்ப்பு இழப்பு என்று வருகிற போது அனிதாவுக்கும் எங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேற்றுமையில்லை!!

 

எங்கள் தங்கையின் இழப்பை எங்களால் புரிந்து கொள்ள முடியும் , முடிகிறது.

ஆனால் எங்கள் பிரச்சனைகளை  விடமாட்டோம் அனிதா!
சொல்வோம் சமூக நீதி போராடிப்பெற்றோமென்று..

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top