சினிமாவை விட அரசியல் நிறைய தெரியனும்: விஜய் சேதுபதி

சென்னையில் நடைபெற்ற அனிதா நினைவேந்தல் கூட்டத்தில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:-

கல்வி மிகவும் அடிப்படை தேவை. அதற்காக ஒரு உயிரை இழந்துவிட்டு வருத்தப்படுகிறோம். சரி செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். இதுவே ரொம்ப அசிங்கமாக இருக்கிறது.

அதையெல்லாம் தாண்டி, ரொம்ப காலமாக நம் மீது ஒரு அரசியல் வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. நம்மை ஜாதிவாரியாக பிரிக்கிறது, முதலில் அந்த இடத்தில் இருந்து நாம்மை பிரிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அது முதலில் ஒழிக்கப்பட வேண்டும்.

நம்ம இந்த போராட்டங்களை பண்ணுவதும், பேசுவதும் இதனையெல்லாம் கேட்டு கேட்டு அவர்களுக்கு பழகிப் போச்சு என்று நினைக்கிறேன். இப்ப இது அவர்களுக்கு போய் சேருமா என்று கூட தெரியவில்லை. நான் ரொம்ப காலமாக கேட்டிக் கொண்டிருப்பதும் அதுதான். போராடுபவர்களை சமாளிப்பவர்கள் நிறைய வளர்ந்துவிட்டார்கள். டெனிக்கலாகவும் சரி, யோசிக்கிற விதத்திலும் சரி.

போராடும் முறையில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறேன். நாம் ஒரிடத்தில் ஒன்று கூடி போராடினால், அதனை எப்படி களைப்பது என்று அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். அதனை தாண்டி அடுத்து வரப்போகிறவர்கள், அடுத்த தலைவர்கள், அறிவுசார்ந்த பெரியவர்கள் போராட்ட முறையை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

டெல்லியில் உட்கார்ந்து கத்தி பார்த்தோம் கண்டுகவே இல்லை. இங்க உட்கார்ந்திருக்கிறோம். அங்க உட்கார்ந்திருந்தோம் பிரித்துவிட்டார்கள். இது அடுத்த கட்டத்திற்கு போகணும். அது சீக்கிரமாக நடக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு அரசியலை பற்றிய அறிவை ஊட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். அரசியல் தெரியனும், சினிமாவை விட அரசியல் நிறைய தெரியனும். அது நமக்கு ரொம்ப முக்கியம். அதனை கத்துக்கணும்.

வாட்ஸ் அப்பில் நிறைய வீடியோ வருகிறது. அரசியல் பற்றி வீடியோக்களை பதிவு செய்து கொண்டே இருக்க வேண்டும். அரசியல் பற்றிய அறிவை புகுத்து வேண்டும். சாதி ஒழிய வேண்டும். இது ரொம்ப நாளாக சமுதாயத்தை சீரழிக்கிறது. நம்மை பிரித்து வைக்கிறது. நம்மை போராட தயங்க வைக்கிறது. இந்த போராட்டம் அடுத்தகட்டத்திற்கு போக வேண்டும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top