நீட் தேர்வை ரத்த செய்யக் கோரி திருச்சியில் 5 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்

 

 

நீட் தேர்வை ரத்த செய்யக் கோரியும் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் திருச்சியில் 5 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். இந்நிலையில் திருச்சியில் நேற்று கல்லூரி மாணவர்கள் போலீசார் அனுமதி தர மறுத்த நிலையில் போராடி வருகின்றனர்.

அதிக மதிப்பெண் எடுத்த நிலையிலும் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காமல் உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கு உரிய பதிலைத் தர வேண்டும். மேலும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top