அதிக முறை நாட் அவுட்: சாதனை படைத்தார் தோனி

இந்திய முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் டோனி நேற்றைய இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 49 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை ‘நாட்-அவுட்’ ஆக இருந்த வீரர் என்ற சாதனையை டோனி அடைந்துள்ளார். அவர் இதுவரை 73 ஆட்டங்களில் ‘நாட்-அவுட்’டாக இருந்துள்ளார். இதில் 2-வது பேட்டிங் செய்கையில் 42 முறை ஆட்டம் இழக்காமல் நின்றதும் அடங்கும். இதற்கு முன்பு இலங்கையின் சமிந்தா வாஸ், தென்ஆப்பிரிக்காவின் ஷான் பொல்லாக் தலா 72 முறை ‘நாட்-அவுட்’டாக இருந்ததே இந்த வகையில் அதிகபட்சமாகும்.

இந்த ஆட்டம் டோனிக்கு 300-வது ஒரு நாள் போட்டியாகும். சச்சின் தெண்டுல்கர் (463 ஆட்டம்), ராகுல் டிராவிட் (344 ஆட்டம்), முகமது அசாருதீன் (334 ஆட்டம்), சவுரவ் கங்குலி (311 ஆட்டம்), யுவராஜ்சிங் (304 ஆட்டம்) ஆகியோருக்கு பிறகு இந்த மைல்கல்லை எட்டும் இந்தியர் டோனி தான். ஒட்டுமொத்த அளவில் இந்த பட்டியலில் 20-வது இடத்தில் இருக்கிறார். டோனி ஒரு நாள் போட்டியில் 10 சதம், 65 அரைசதம் உள்பட 9,657 ரன்கள் குவித்து இருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top