ராகுல் காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் மோடி பிரசாரம்!

modi-rahul gandhiராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் அவருக்கு எதிராக பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடும் ஸ்மிரிதி இரானியை ஆதரித்து நாளை மறுநாள் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அமேதி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பிரபல டி.வி. நடிகையும், டெல்லி மேல்-சபை எம்.பி.யுமான ஸ்மிரிதி இரானி நிறுத்தப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் கவிஞர் குமார் விஸ்வாஸ் களத்தில் உள்ளார்.

இங்கு வருகிற 7-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில், அமேதி தொகுதியில் இரானியை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான வருகிற 5-ந்தேதி பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்கிறார். மேலும், பா.ஜனதாவின் மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி ஆகியோரும் இந்த பிரசாரத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top