கருப்புபண ஒழிப்பு: மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் -ப. சிதம்பரம்

 

மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பரிசு கொடுக்கும் அளவிற்கு தகுதி உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் கூறினார்

 

1 சதவீத ரூபாய் நோட்டுகள் கூட திரும்பி வரவில்லை என்று ரிசா்வ் வங்கி தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது. இது தான் கருப்பு பண ஒழிப்பின் சாதனையா என்றும் கேள்வி எழுப்பினார்

மேலும், அவா் கூறுகையில், மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்ததுடன் 104 அப்பாவி பொதுமக்களை பலி கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தோல்வி அடைந்ததற்காக பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் பொருளாதார நிபுணா்களுக்கு நோபல் பரிசு வழங்கும் அளவிற்கு அவா்களுக்கு தகுதி உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்ததன் மூலம் 16 ஆயிரம் கோடி லாபம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட 21 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது என அவர் கூறினார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top