குண்டர் சட்டம், UAPA, தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யவேண்டும்; அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு

 

 

அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு  சார்பாக இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது

தமிழக வாழ்வாதாரக்  சிக்கலுக்காக ,உரிமைக்காக போராடும் இயக்கங்களை அரசு அடக்குமுறையை ஏவி போராடும் போராளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்வதும் அவர்கள் மீது கொடிய வழக்குகளை போடுவதும் தமிழ்நாட்டில் வாடிக்கையாகி விட்டது.இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது அரசியல் பழிவாங்கும் செயலாகும் இதை அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு  கண்டிக்கிறது

 

தமிழக வாழ்வு உரிமை கட்சி மற்றும்  கூட்டமைப்பின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்த இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தோழர் அரங்க குணசேகரன் தோழர். ,விடுதலை ராஜேந்திரன் , தோழர். தியாகு ,தோழர் வன்னியரசு,தோழர் பிரவின் ,தோழர் தமிழ் நவீன் , மற்றும் பல இயக்கத் தோழர்கள் கலந்துக்கொண்டு தீர்மானத்தை இயற்றினார்கள்

 

குண்டர் தடுப்புச் சட்டம், UAPA, தேசிய பாதுகாப்பு சட்டம் போன்ற தடுப்பு காவல் சட்டங்களை இந்தியாவிலேயே மிக அதிகமாக பயன்மடுத்தும் மாநிலங்களில் தமிழ் நாடும் ஒன்று.

 

இத்தகைய தடுப்பு காவல் சட்டங்களில் கைது செய்யப்படுவர்களை சென்னை உயர்நிதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஐந்து அல்லது ஆறு மாதங்களில் தடுப்பு காவல் சட்டங்களுக்கான தகுந்த முகாந்திரம் இல்லை என்று விடுதலை செய்கிறது. இதன்முலம் தமிழநாடு அரசு குண்டர் தடுப்பு சட்டம், UAPA, போன்ற சட்டங்களை தவறாக பண்படுத்தி அரசியல் செயல்பாட்டாளர்களை பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்படுகிறது என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

 

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுகிறவர்கள் குறைந்தது ஐந்து வழக்குகளிக்குமேல் அசாதாரண குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மட்டுமே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய முடியும் என்றிருந்த அச்சட்டத்தின் விதிகளை 2014-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு முதல் குற்ற வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையிலேயே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்ற சட்டதிருத்தத்தை கொண்டு வந்து மக்கள் உரிமைகளை பறித்தது. இதனடிப்படையில் தமிழக அரசு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களை குன்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்து மக்கள் மக்கள் மத்தியில் அவர்களை குற்றவாளியாக சித்தரிப்பதை அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

குண்டர் தடுப்பு சட்டம் இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்.

 

UAPA, NSA போன்ற தடுப்பு காவல் சட்டங்களை இந்திய அரசு ரத்து  செய்ய வலியுறுத்தி  தொடர்ந்து நூறு கூட்டங்களை நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது

 

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், இளமாறன், அருண் பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த மனைவி வளர்மதி ஆகிய ஐவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுதலை செய்ய தமிழக அரசை, அரசு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

 

மாவோயிஸ்ட்களை ஆதரிப்பது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புரையில் சுட்டிக்காட்டிய பின்னரும், மாவோயிஸ்ட் என்ற பெயரில் தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டவர்களுக்காக, வழக்காடிய மதுரை வழக்கறிஞர் முருகன் அவர்கள் மீதும் போடப்பட்டுள்ள UAPA-வின் கீழான கைது நடவடிக்கையை ரத்து  செய்து உடனடியாக அவரை விடுதலை செய்யுமாறு அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு கேட்டுக் கொள்கிறது.

 

சட்ட ரீதியிலும், நியாய அடிப்படையிலும் அறிவுரைக் கழகத்தின் முன் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு இருந்தாலும் அரசாங்கத்தின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்பட்டு திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண் மற்றும் மாணவி வளர்மதி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததை உறுதிபடுத்திய அறிவுரைக்  குழுமத்தின் செயலை அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசின் ஜனநாயக விரோத செயல்களை அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top