கொரிய கடற்பகுதியிலிருந்து அமெரிக்கா ராணுவம் வெளியேறாவிட்டால் ஏவுகணை சோதனைகள் தொடரும்: வடகொரியா எச்சரிக்கை

சியோல்:

வடகொரியா நேற்று கனான் பகுதியில் இருந்து நீண்ட தூர ஏவுகணையை வீசி சோதனை நடத்தியது. அந்த ஏவுகணை வானில் 550 கி.மீ. உயரத்தில் 2,500 கி.மீ. தூரம் பயணம் செய்து ஜப்பானின் ஹொக்கைடோ தீவை கடந்து சென்று பசிபிக் கடலில் விழுந்தது.

ஜப்பான் பகுதியின் மேலாக இந்த ஏவுகணை பறந்துள்ளதால் அந்நாட்டின் பிரதமர் அபே உள்ளிட்டோர் வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஐ.நா சபை இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது.

இது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்தது. வடகொரியாவின் இச்செயல் ஜப்பானை கடும் அதிர்ச்சி அடைய செய்தது. அமெரிக்க அதிபர் டிரம்புடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு 40 நிமிட நேரம் பேசினார். பின்னர் டிரம்ப் அளித்த பேட்டியில் வடகொரியாவின் அத்து மீறல் குறித்து ஐ.நா. சபையில் நாம் உடனடியாக ஆலோசித்து அந்நாட்டின் மீதான நெருக்கடியை அதிகரிக்க வேண்டும் என்றார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தை கைவிட வேண்டும் மற்றும் கொரிய கடற்பகுதியில் உள்ள அமெரிக்கா போர் கப்பல்கள் வெளியேற வேண்டும் இல்லாவிட்டால் ஜப்பான் மீது ஏவுகணையை பறக்க விட்டது முதல் கடட நடவடிக்கைதான். இது போன்று பசிபிக் கடல் பிராந்தியத்தில் பல ஏவுகணை சோதனைகள் நடைபெற உள்ளன. அதுவரை காத்திருங்கள் என கூறியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top