ரூ.100 கோடியை தாண்டியது அஜித்தின் விவேகம்: முதல் வாரம் box office

 

சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் ஆகியோர் நடிப்பில் உருவான விவேகம் உலகம் முழுவதும் உள்ள 42 நாடுகளில் 3200க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. தமிழகத்தில் மட்டும் 770 திரையரங்குகளில் வெற்றிநடைபோடுகிறது. விவேகம் உலகம் முழுவதும் வசூல் சாதனையை படைத்து வருகின்றது.

 

 

திரைப்பட விமர்சகர்கள் விவேகம் படத்தின் கதை மற்றும் இயக்குனரின் இயக்கத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் முன் வைத்தனர். அஜித் ரசிகர்கள் சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்நிலையில் இப்படத்தின் மீது நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது.

 

 

ஆனால், அஜித் என்ற தனி நபருக்காக இந்த படம் நல்ல வசூலை குவித்து வருகிறது அஜித் படம்  நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூல் படமாக  ஆனது புரியாத புதிராக இருக்கிறது. தற்போது படம் ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் எந்த ஏரியாவில் எத்தனை கோடி வசூல் என்பதை ட்விட்டரில் வைரலாகி கொண்டிருக்கும் பட்டியலை பாருங்கள் !

 

சென்னை- ரூ 5.7 கோடி
செங்கல்பட்டு- ரூ 1.8 கோடி
சவுத் ஆற்காடு- ரூ 2.5 கோடி
நார்த் ஆற்காடு- ரூ 2.6 கோடி
திருச்சி, தஞ்சாவூர்- ரூ 5.5 கோடி
சேலம்- ரூ 5.7 கோடி
மதுரை- ரூ 8.1 கோடி
கோயமுத்தூர்- ரூ 9.2 கோடி
திருநெல்வேலி, கன்னியாகுமரி- ரூ 2.7 கோடி
கர்நாடகா- ரூ 9 கோடி
ஆந்திரா, தெலுங்கானா- ரூ 6 கோடி
கேரளா- ரூ 4.5 கோடி
மற்ற மாநிலங்கள்- ரூ 60 லட்சம்
வெளிநாடுகள்- ரூ 36 கோடி

#Vivegam 1st Weekend (Aug 24th – 27th) WW BO:#India – ₹ 69.50 Cr

Overseas – ₹ 36.50 Cr

Total – ₹ 106 Cr

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top