மும்பை முடங்கியது- தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை

இன்று மும்பையில் பலத்த மழை பொழிந்ததின் விளைவாக பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.திங்கட்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, நகரத்தின் பல பகுதிகளிலும் மழைநீர் வடிவதற்கு வழி இல்லாமல், போக்குவரத்து இயக்கம் குறைந்து, புறநகர் ரயில் அமைப்பு தடைபட்டுள்ளது மற்றும் நகரத்தின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.

மாலை 4.30 மணியளவில் அதிக மழை பெய்யும் நிலையில், மழை தொடர்ந்து நீடித்தால் நிலைமை மோசமடையலாம் என்று மும்பை வானிலை அறிக்கை கூறுகின்றது.

பிரயான்மும்பாய் நகராட்சி கழகம் (பி.எம்.சி.) அதிகாரிகள் சியோன் மற்றும் ஆந்தேரி சுரங்கப்பாதைகளில் தண்ணீர் நிறைந்து முழுகியுள்ளதாக இரண்டு புகார்களை மட்டுமே பெற்றுள்ளனர். பொது மக்கள் முபையின் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதாக புகார் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மையம், மிக அதிகமான கன மழை பெய்யக்கூடும் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில், நகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் 7 ஏரிகள் ஏறக்குறைய 100 சதவிகிதத்தை நெருங்கி வருகின்றன. திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் தொடங்கிய மழை கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் 152 மிமீ மழை பொழிந்துள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top