ஜப்பானை தாண்டி சென்ற வடகொரியா ஏவுகணை-ஜப்பான் பிரதமர் கண்டனம்

வடகொரியா இன்று காலை மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. இந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள ஹோக்கைடோ பகுதி வானில் பறந்தது. ஜப்பானில் வானில் சுமார் 14 நிமிடங்கள் பறந்தது.

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை அமெரிக்காவை எச்சரித்து வந்தது. அதை சிறிதும் கண்டுகொள்ளாமல் அமெரிக்கா கொரிய தீபகற்பத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த நிலையில் வாடா கொரியா தொடர்ச்சியான ஏவுகணை சோதனையை மேற்கொணடது.

டோக்கியோ:

வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை களை வீசி பரிசோதித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஐப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொருளாதார தடையும் விதித்தன. அதை கண்டு கொள்ளாத வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு, கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்காவிற்கும், வடகொரியாவிற்கும் போர் ஏற்படும் நிலை ஏற்பட்டது.

சமீபத்தில் அமெரிக்காவின் குயாம் தீவை தாக்கும் திறன் படைத்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியது. அதற்கு பதிலடி கொடுக்க தென் கொரியாவுடன் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவம் கூட்டாக போர் பயிற்சி மேற்கொண்டது. இது வட கொரியாவை ஆத்திரத்தின் உச்சியில் ஏற்றியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பகத்தில் போர் பதட்ட சூழ்நிலை நிலவுகிறது.

ஏற்கனவே அமெரிக்காவை எச்சரித்த வடகொரியா இப்போது ஏவிய ஏவுகணையானது ஜப்பானை கடந்தது சென்றது சர்வதேச அரங்கில் பெரும் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் எழுப்பி உள்ளது. தென் கொரியா – அமெரிக்க கூட்டுப்படைப் பயிற்சியினை மேற்கொள்ள உள்ள நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையை செய்து உள்ளது. வடகொரியா மூன்று ஏவுகணைகளை வீசி உள்ளது. ஏவுகணையானது ஜப்பானின் வான்வழியாக சென்று உள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள ஜப்பான் தன்னுடைய நாட்டு மக்களை பாதுகாக்க முழு நடவடிக்கையையும் எடுக்க உள்ளதாக தெரிவித்து உள்ளது.

“வடகொரியா வீசிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையானது ஜப்பானின் வான் வழியாக சென்று உள்ளது. நாங்கள் உடனடியாக தகவல்களை திரட்டிஉள்ளோம், முழுமையாக விவரங்களை ஆய்வு செய்து உள்ளோம், ஜப்பான் மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் அரசு எடுக்கும்,”என கூறிஉள்ளார் பிரதமர் ஷின்ஸோ அபே.

ஜப்பான் கடல் பகுதியில் இருந்து 1,180 கி.மீ தூரம் கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்தது. விழுவதற்கு முன்பாக ஏவுகணை மூன்று பாகங்களாக வெடித்து சிதறியது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் குயாம் தீவை எளிதில் சென்று தாக்கும் திறன் படைத்தது என்று கூறப்படுகிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top