சசிகலா, டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

டி.டி.வி.தினகரன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில நிர்வாகிகள் என சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்ட இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

1. விரைவில் பொதுக்குழுவையும், செயற்குழுவையும் கூட்ட அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு.

2. சசிகலா, தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவு.

3. சசிகலா மற்றும் டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் எதுவும் செல்லாது.

4. அதிமுகவுக்கு சொந்தமான ஊடகங்களான நமது எம்.ஜி.ஆர், ஜெயா தொலைக்காட்சியை கைப்பற்றும் நடவடிக்கை.

எம்.எல்.ஏ.க்கள் பேசுகையில் சசிகலா கண்டிப்பாக நீக்கப்படுவார் இதில் மாற்றுக் கருத்து இல்லை கிடையாது என்று எம்எல்ஏ ஆறுகுட்டி கூறிஉள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர் செல்வம் ஆதரவு நிர்வாகிகளை நீக்கி தினகரன் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைத்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையில் மிகவும் பரபரப்பாக கருதப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top