பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப்: சிந்து, ஸ்ரீகாந்த் கால்இறுதிக்கு முன்னேற்றம்

ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோவில் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து ஹாங்காங்கை சேர்ந்த செயுங் நிகன் யி-ஐ எதிர்கொண்டார்.

முதல் செட்டை 19-21 என பி.வி. சிந்து இழந்தார்.பி.வி. சிந்துவிற்கு ஹாங்காங் வீராங்கனை கடும் சவாலாக விளங்கினார். ஆனால், 2-வது செட்டில் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருந்தாலும் ஹாங்காங் வீராங்கனை சிந்துவிற்கு எல்லா வகையிலும் ஈடுகொடுத்து விளையாடினார். இறுதியில் பி.வி. சிந்து 23-21 என கடும்போராட்டத்திற்குப் பின் அந்த செட்டைக் கைப்பற்றினார். அதே வேகத்தில் 3-வது செட்டை 21-17 எனக் கைப்பற்றி ஹாங்காங் வீராங்கனையை வீழ்த்தினார்.

இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 27 நிமிடங்கள் தேவைப்பட்டது. அடுத்து சீனாவின் சன் யுவை எதிர்கொள்கிறார். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அஜய் ஜெயராம் 11-21, 10-21 என சென் லாங்கிடம் வீழ்ந்தார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top