இந்திய கிரிக்கெட் வாரியம் எப்பொழுதும் ஆண் பேரினவாத அமைப்பு – பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் கேப்டன் டயானா எடுல்ஜி கூறியதாவது:-

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் “ஆண் பேரினவாத அமைப்பு” என அழைத்துள்ளார்.கடந்த மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் பெண்களின் கிரிக்கெட் அணியின் செயல்திறன் சிறப்பாக இருந்தது. இது பாலியல் அமைப்பில் பல உறுப்பினர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்து உள்ளது.

முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசனையும் விமர்சித்தார். அவர் பெண்கள் கிரிக்கெட்டை வெறுகிறார். 2011 ல் தலைவராக அவர் நியமிக்கபட்டபோது வாங்கடே ஸ்டேடியத்திற்கு வாழ்த்து சொல்ல சென்ற போது பெண்கள் கிரிக்கெட்டை நடத்த அனுமதிக்க மாட்டேன்” என கூறினார் என பேசினார்.

குறிப்பாக பெண்கள் கிரிக்கெட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்கான எடுல்ஜி முக்கிய முயற்சிகள் மேற்கொண்டு உள்ளார். எடுல்ஜி முதல் தடவையாக ஒருநாள் கிரிக்கெட் பெண்கள் அணித் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றத்தால் (SC) பி.சி.சி.ஐ.க்கு நான்கு நிர்வாகிகள் குழுவில் நியமிக்கப்பட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top