முதல்வர் எடப்பாடிக்கான ஆதரவு வாபஸ்- தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம்

 

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரும் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர்.

இது குறித்து  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க. தமிழ்செல்வன். இன்று காலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் சந்தித்து கடிதம் ஒன்றை கொடுத்தோம்  ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் முதல்வர், ஆதரவு எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார். அதனால் அவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடிதம் கொடுத்தோம். கடிதத்தைப் பெற்றுக்கொண்ட ஆளுநர் எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாகக் கூறினார்.

ஒபிஎஸ்ஸுக்கு ஏன் திடீர் ஆதரவு? அதிமுக அம்மா அணியைச் சேர்ந்தவர்கள் நாங்கள். ஆனால், வெறும் 9 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள ஓபிஎஸ்ஸுக்கு திடீரென துணை முதல்வர் பதவி ஏன் கொடுக்க வேண்டும்? அவர் தானே இந்த ஆட்சியில் ஊழல் நடக்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இரட்டை இலை சின்னத்தை முடக்க காரணமாக இருந்தார். கட்சியை விட்டு வெளியே போன அவரை மீண்டும் ஏன் ஆதரிக்க வேண்டும்?

 

எங்களை ஏன் கண்டுகொள்ளவில்லை? ஆனால் எங்களிடம் 19 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எங்களை ஏன் எந்த விஷயத்திலும் கலந்தாலோசிப்பது இல்லை. சுயநலத்துக்காக அதிமுக அம்மா அணியுடன் வந்து சேர்ந்த ஓபிஎஸ்ஸுக்கு எதற்கு பதவி தர வேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி. ஆதரவை இழந்துவிட்டார். ஆகையால், 19 எம்.எல்.ஏக்களின் நம்பிக்கையை இழந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும். வேறு முதல்வரை நியமிக்க வேண்டும். அதற்கு சட்டத்தில் எல்லா வழிவகையும் உள்ளது என்பதை ஆராய்ந்துதான் இந்த கோரிக்கை ஆளுநரிடம் முன்வைத்துள்ளோம். இப்போதும் எங்களுக்கு சசிகலா தான் பொதுசெயலாளர். இவ்வாறு தங்க தமிழ்செல்வன் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top