கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் வைகோ- உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்!

திமுக தலைவர் கருணாநிதியை மதிமுக பொதுச்செயலர் இன்று மாலை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்கிறார்.

முதுமை காரணமாக கருணாநிதி  ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை உணவு குழாய் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த செயற்கை உணவு குழாய் 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்பட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு இந்த செயற்கை உணவு குழாய் மாற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கருணாநிதியை நேரில் சந்தித்தார். அப்போது, கருணாநிதி தம்மை அடையாளம் கண்டு கொண்டதாகவும் பேச முயற்சித்தார் எனவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இன்று மாலை கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளார். அவருடன் மதிமுக மூத்த தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்டோரும் செல்கின்றனர்.

கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர் கருணாநிதியை வைகோ சந்திக்கிறார். கடந்த ஆண்டு காவேரி மருத்துவமனையில் கருணாநிதியை பார்க்க வந்த வைகோவுக்கு திமுக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு ஸ்டாலின் வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top