ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சத்தீஷ்காரில் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உயிரிழப்பு

சத்தீஷ்காரில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 குழந்தைகள் உயிரிழந்து உள்ளது.

ராய்பூரில் அரசு நிர்வாகம் செய்யும் அம்பேத்கர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆக்ஸிஜன் குழாய் செயல்பாட்டை பராமரிக்கும் பணியாளரின் கவனக்குறைவு காரணமாகவே ஆக்ஸிஜன் நோயாளிகளுக்கு கிடைக்க பெறுவதில் இடையூறு ஏற்பட்டது, நள்ளிரவு பணியிலிருந்த பணியாளர் மது அருந்தியிருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பணியின் போது மது அருந்திய பணியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டு போலீஸ் காவலுக்கு எடுக்கப்பட்டு உள்ளார் என தகவல்கள் தெரிவித்து உள்ளனர். மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற குற்றச்சாட்டானது அரசு தரப்பில் மறுக்கப்பட்டு உள்ளது.

சத்தீஷ்கார் மாநில சுகாதாரத் துறை செயலாளர் ஆர். பிரசன்னா பேசுகையில், ஆக்ஸிஜன் அழுத்தம் குறைவாக இருந்தது, மெக்கானிக் – ஆப்ரேட்டர் பணியில் சரியாக செயல்படவில்லை. குழந்தைகள் நலப்பிரிவுக்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனில் பற்றாக்குறை எதுவும் கிடையாது என கூறிஉள்ளார்.

“ஆக்ஸிஜன் அழுத்த பற்றாக்குறை காணப்பட்டதும் மூத்த மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் உடனடியாக விரைந்து சென்று பிரச்சனையை நிவர்த்தி செய்தனர். குழந்தைகள் உயிரிழப்பு உடல்நல குறைவால் ஏற்பட்டது,” என குறிப்பிட்டு உள்ளார் பிரசன்னா.

இச்சம்பவத்திற்கு அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.கவின் முதல்-மந்திரி ராமன் சிங் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது. “குழந்தைகளின் இறப்பை ஏற்படுத்தும் எந்த பொறுப்பற்ற செயலும் மிகவும் முக்கியமான பிரச்சனையாகும். இவ்விவகாரத்தை கவனிக்க சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொண்டு உள்ளேன். இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்கமுடியாது,” என கூறி உள்ளார் ராமன் சிங். ராய்பூரில் இருக்கும் அம்பேத்கர் மருத்துவமனை மாநிலத்தில் மிகப்பெரிய மருத்துவமனையாகும்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ்தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் பிறந்த குழந்தைகள் உள்பட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் 63 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணையையும் நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சத்தீஷ்காரில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 3 குழந்தைகள் உயிரிழந்து உள்ள நிலையில் பா.ஜக அரசு இது குறித்து எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top