பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6.4 ஆக பதிவு

தெற்கு பசுபிக் நாடான பிஜி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோளில் 6.4 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் எந்த ஒரு சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

கடல் மட்டத்திலிருந்து சூவாவின் கிழக்கே 287 கிலோமீட்டர் (178 மைல்) தொலைவில்,538 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

கட்டிடங்கள் குலுங்கியதால் வீடுகள், அலுவலங்களில் பணியாற்றியவர்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து எந்த வித சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top