இலங்கை-இந்தியா கிரிக்கெட்; 5 ஒருநாள் போட்டித் தொடர் நாளை துவங்குகிறது

 

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் இந்தியா 3 டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது.

இந்தியா-இலங்கை இடையேயான 5 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் தமுல்லாவில் நாளை (20-ந்தேதி) நடக்கிறது.

டெஸ்ட் தொடரை போலவே ஒருநாள் தொடரிலும் இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். ஒருநாள் தொடரையும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை அணி ஒருநாள் தொடரிலாவது வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. உபுல் தரங்கா தலைமையிலான அந்த அணி பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் இருக்கிறது.

மலிங்கா அந்த அணியின் பவுலிங்கில் முக்கிய பங்கு வகிப்பார். ஆல்ரவுண்டர் திசாரா பெரைரா மீதும் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. இலங்கை அணி சமீபத்தில் சொந்த மண்ணில் ஜிம்பாப்வேயிடம் தோற்றதால் நெருக்கடியில் உள்ளது. உலககோப்பைக்கு நேரடியாக தகுதி பெற இந்த தொடரில் 2 ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற வேண்டும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி டென் 3 மற்றும் தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top