ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் தொடர்ந்து கோலி முதலிடம்

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் விராட் கோலி 873 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 861 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் 847 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். டாப் 15 இடங்களில் தோனி (12), தவண் (13), ரோஹித் சர்மா (14) ஆகியோர் உள்ளனர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட் முதலிடத்தில் உள்ளார்.பந்து வீச்சுத் தரவரிசையில் இந்திய வீரர் ஒருவர் கூட டாப் 10-ல் இல்லை, புவனேஷ் குமார்தான் அதிகபட்சமாக 13-ம் இடத்தில் உள்ளார்.

சிறந்த ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்கா 119 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்தியா 114 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இலங்கை அணி 88 புள்ளிகளுடன் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது.இலங்கை நேரடியாக 2019 உலகக்கோப்பைக்குத் தகுதி பெறுவதை உறுதி செய்ய இந்தத் தொடர் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இலங்கை அணி குறைந்தது 2 போட்டிகளையாவது வெல்வது அவசியம். அப்போதுதான் இலங்கை தகுதி பெறுவதை உறுதி செய்துகொள்ள முடியும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top