வேலூர் சிறையில் ஜீவசமாதி அடைய முருகன் கோரிக்கை; தமிழக முதல்வருக்கு மனு

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

 

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன். சிறைத்துறை தலைவருக்கு கடந்த மாதம் மனு ஒன்றை வேலூர் சிறை அதிகாரிகள் மூலம் அனுப்பியிருந்தார். அம்மனுவில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்துவரும் நிலையில், தனது விடுதலை கேள்விக்குறியாகியுள்ளது. சிறை வாழ்க்கையை வெறுப்பதாகவும் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

 

இக்கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 17-ம் தேதி முதல் சிறையில் வழங்கப்படும் உணவை சாப்பிட மறுத்து பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்தார். அவர் அளித்த மனுவின் மீது கடந்த ஒரு மாதமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

இந்நிலையில், வேலூர் சிறையில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை முருகன் நேற்று தொடங்கியுள்ளார். பழங்களை சாப்பிட மறுத்ததுடன் தண்ணீரை மட்டும் குடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜீவசமாதி அடைவது குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவையும் அளித்துள்ளார்.

 

இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘சிறையில் ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் என்று முருகன் ஏற்கெனவே மனு அளித்திருந்தார். இதன் மீது எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

 

தொடர்ந்து அவர் உண்ணாவிரதம் இருந்தால் ஓரிரு நாளில் அவரை சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top