மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சட்ட மசோதா எப்போது சட்டமாக்கப்படும்? உயர் நீதிமன்றம்

 

2 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சட்ட மசோதாவை மக்களவையில் கிடப்பில் வைத்திருக்க முடியுமா? ஏன் 3-ம் பாலினத்தவர்களுக்காக பிரத்யேகமாக கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட இதர சமூக பலன்களை வழங்கக்கூடாது? என்பது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

காஞ்சிபுரத்தில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் எம்சிஏ வரை படித்துள் ளேன். படிக்கும் வரை நான் பெண்ணாகவே இருந்தேன். ஆனால் அதன்பிறகு உடல் ரீதியாக ஏற் பட்ட மாற்றத்தால் நான் ஆணாக மாறினேன். பின்னர் நான் ஆணாக மாறியதற்கு மருத்துவரிடமிருந்து முறையாக அங்கீகாரச் சான்றிதழ் பெற்றேன். இதுபற்றி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுள்ளேன்.

 

பின்னர் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வருமான வரி அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் என் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றியுள்ளேன். எனது எம்சிஏ மற்றும் இதர கல்விச் சான்றிதழ்களில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றக்கோரி அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தேன். ஆனால் கல்வித் துறை அதிகாரிகள் பெண்ணாக உள்ள எனது பெயரை ஆணாக மாற்றித்தர மறுக்கின்றனர். எனவே எனது கல்வி சான்றிதழ்களில் பெயர் மற்றும் பாலினத்தை மாற்றித்தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், மனுதாரரின் கல்விச் சான்றிதழ்களில் உள்ள பெயரை மாற்றிக் கொடுக்க பள்ளி கல்வித்துறை, சென்னை மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டார். அப்போது நீதிபதி, ‘‘இந்தியாவில் 20 லட்சத்துக்கும் அதிகமான மூன்றாம் பாலினத்தவர்கள் ஒரு சமுதாயமாகவே வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் 2015-ம் ஆண்டு மாநிலங்களைவையில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான உரிமையை பாதுகாக்கும் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டும் இன்னும் சட்டமாக்கப்படவில்லை.

 

2 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சட்ட மசோதாவை மக்களவையில் கிடப்பில் வைத்திருக்க முடியுமா? ஏன் 3-ம் பாலினத்தவர்களுக்காக பிரத்யேகமாக கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட இதர சமூக பலன்களை வழங்கக்கூடாது இந்த வழக்கில் மத்திய சட்டத்துறை, மத்திய சுகாதாரத்துறை, மத்திய சமூக நலத்துறை ஆகியோரையும் எதிர் மனுதாரராக சேர்க்கிறேன். என உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top