வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடரும்

 

 

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்நிலையில் தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் இன்று (வெள்ளிக்கிழமை) கூறும்போது, ”வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளது. சனி மற்றும் ஞாயிறு முதல் மழையின் அளவு குறையும்.

 

சென்னையைப் பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை வேலூர் மாவட்டத்திலுள்ள சோளிங்கரில் 8.செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது” என்றார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top