புதிய இன்ஃப்ராரெட் வைபை: நொடிக்கு மூன்று திரைப்படங்களை டவுன்லோடு செய்யலாம்

wi

சர்வதேச சந்தையில் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் வைபை வேகங்களை விட 300 மடங்கு வேகமாக இண்டர்நெட் வழங்கும் திறன் கொண்ட புதிய தொழில்நுட்பத்தை டட்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மின்சார கதிர்களை பயன்படுத்தி வயர்லெஸ் முறையில் தகவல்களை பரிமாற்றம் செய்யும் புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளோம். ஒவ்வொரு கதிர்களும் அதிவேக திறன் கொண்ட சேனல் போன்று வேலை செய்கிறது. இந்த கதிர்கள் அனைத்தும் ஆப்டிக்கல் ஃபைபர் போன்று வேலை செய்கிறது. புதிய வயர்லெஸ் வழிமுறைகளின் முதற்கட்ட சோதனைகளில் நொடிக்கு 112 ஜிபி வேகத்தை வழங்குகிறது.

இந்த வேகம் கொண்டு மூன்று எச்டி திரைப்படங்களை ஒரே நொடியில் முழுமையாக டவுன்லோடு செய்ய முடியும். லைட் ஆன்டெனாக்கள் நம் கண்களுக்கு தெரிந்திராத கதிர்களை வெவ்வேறு கோணங்களில் பரப்பும். ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தும் போது ஆன்டெனா எல்லையை கடந்தால், மற்றொரு சிக்னல் மூலம் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்கும்.

இனஃப்ராரெட் சிக்னல்கள் கண்களுக்கு புலப்படாது என்பதால் பயன்படுத்துவோர் கண்களில் நுழையாது, பாதுகாப்பானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு பயனருக்கும் தனி ஆன்டெனா கிடைக்கும் என்பதால் அனைவருக்கும் சீரான வேகம் கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்துடன் இன்ஃப்ராரெட் சிக்னல்கள் சுவற்றை கடந்து வெளியே செல்லாது என்பதால் தகவல் பரிமாற்றத்தை யாராலும் கவனிக்க முடியாது, இதனால் இந்த தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பு நிறைந்தது ஆகும். இவ்வகை தொழில்நுட்பத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top