காஷ்மீர் மக்களுக்கு-சிறப்பு அந்தஸ்துக்கு எதிரான பாஜக மனு!

images

 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டவிதிக்கு எதிரான மனு மீது அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது குறித்து 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தரமாக வசிப்பவர்கள் என்று கருதுபவர்களுக்கு வேலை மற்றும் சொத்துக்கள் வாங்குவதில் `35ஏ சட்டவிதி’` சிறப்பு சலுகையை அளிக்கிறது. மேலும் வெளிநபர்கள் நிலம் மற்றும் வீடுகளை வாங்குவதையும் அது தடுக்கிறது.

 

1947ஆம் ஆண்டு இந்த சிறப்பு சட்டம்  காஷ்மீரின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதற்கும் கஷ்மீரை இந்தியாவோ பாகிஸ்தானோ சொந்தம் கொண்டாடக்  கூடாது என்பதற்கும் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. ஆனால் இந்தியா காஸ்மீருக்கு பாதுகாவலன் என்ற முறையில் பல சட்டங்களை இயற்றி காஸ்மீரில் பொம்மை அரசுகளை உருவாக்கி தனக்கு சாதகமாக   காஸ்மீரை ஒரு மாநில அளவிற்கு உருவாக்கி விட்டது. இந்தியர்கள் காஸ்மீரை இந்திய மாநிலங்களில் ஒன்றாக பார்க்க துவங்கி விட்டார்கள்.

 

 

ISIKashmirPalestine
நடைமுறையில் உள்ள இந்த சட்டம் தான் காஸ்மீரின் தனித்தன்மையாக இருப்பதால் மத்தியில் ஆளும் பாஜக அரசு அந்த சட்டத்திற்கு எதிரான விவாதத்தை கிளப்பிவிட்டது. ஜூலை மாதம் மத்திய அரசு இது தொடர்பாக விவாதத்தை கிளப்பியதிலிருந்து காஷ்மீரில் உள்ள மக்கள், இயக்கங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கவலை தெரிவித்துள்ளனர். சட்ட விதி 370ன் படி மாநிலத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் ஒரு நடவடிக்கையாக அவர்கள் இதனை கருதுகின்றனர்.

35ஏ சட்டவிதியை ரத்து செய்யக் கோரிய சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நிராகரிக்கக் கோரி காஷ்மீர் மாநில அரசும் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய முன்பு இன்று  நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை மீறி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வருவதாக வாதிடப்பட்டது.

இதனையடுத்து, அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக இருக்காமால் இந்த விவகாரத்தை அரசியல் சாசன அமர்வு தான் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

மேலும்,  35ஏ சட்டவிதிக்கு எதிரான மனுவை அரசியல் சாசன அமர்வு விசாரிப்பது தொடர்பாக 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் முடிவு செய்யும் என்று கூறினார். 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இம்மாத இறுதியில் இது குறித்தி விசாரிக்கும் என்று கூறப்படுகிறது.ஆக காஸ்மீர் மக்களின் நிம்மதியை  குலைக்கும் நடவடிக்கையை சட்டரீதியாக மேற்கொண்டுவருகிறது பாஜக அரசு!

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top