அ.தி.மு.க. அடிபணிந்து போவதற்கு காரணம் பா.ஜ.க தான்: மு.க.ஸ்டாலின்

stalin

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாயலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது அசாதாரணமான சூழல் உள்ளது. ஏற்கனவே தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் சபாநாயகர் மீதுதான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தோம். அதற்கு முன்பு தமிழக கவர்னர் உத்தரவுபடி முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி சட்ட மன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார். அதன் மீது தான் வாக்கெடுப்பு நடந்தது.

எனவே தி.மு.க. சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் எதுவும் கொண்டு வரவில்லை. இது கூட தெரியாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க. அரசு எதிர்கொண்டு வெற்றி கண்டதை போல இம்முறையும் வெற்றி பெறுவோம் என்று கூறியது வெட்க கேடான செயல்.

எனவே தமிழகத்தில் இப்போது அசாதாரண சூழல் நிலவுவதால் தேவைப்பட்டால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று நேற்று நான் கூறி இருந்தேன்.

அ.தி.மு.க. அரசு இப்போது மத்திய அரசுக்கு அடிபணிந்து போவதற்கு காரணம் பா.ஜனதாதான்.

எடப்பாடி தொகுதியில் உள்ள கட்சராயன் ஏரியை பார்வையிட தேதியை முடிவு செய்து விரைவில் பார்வையிட செல்வேன். எடப்பாடி தொகுதி மட்டுமல்ல தி.மு.க. தூர் வாரிய அனைத்து குளங்களையும் பார்வையிடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top