இந்தியா – இலங்கை கடைசி டெஸ்ட்: இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான் சதம்

shikar dhawan

பல்லகலே,

இந்தியா – இலங்கை அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பல்லகெலேயில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்தியது. அபாரமாக ஆடிய தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 188 ரன்களை சேர்த்துள்ளது.

தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 85 ரன்களில் ஆட்டமிழந்தார், தொடர்ச்சியாக 7- அரைசதங்கள் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இதையடுத்து புஜரா ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச போட்டிகளில் ஷிகர் தவான் அடிக்கும் 6 வது சதம் இதுவாகும்.

இந்திய அணி 43.2 ஓவர்கள் வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ஷிகர் தவான்(109) ரன்கள், புஜரா(2 ரன்கள்) களத்தில் உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top