மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்

MODI

மத்திய திரைப்படத் தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம்

 

, பிரதமர் மோடி இரு முறை  நடிகை கௌதமி பிரதமர் மோடியை மிக எளிதாக சந்தித்துவந்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.ஆனால் அந்த சந்திப்புக்கு என்ன அர்த்தம் என்பது இப்போதுதான் எல்லோருக்கும் தெரிகிறது

 

மத்திய திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தில் இன்று பல்வேறு அதிரடி நிகழ்வுகள் நடந்துள்ளன. முதலாவதாக வாரியத்தின் தலைவராக 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பஹ்லாஜ் நிஹலானி இன்று நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, பிரபல பாடலாசிரியர் பரசூன் ஜோஷி தலைவராக நியமிக்கப்பட்டார்.

 

அத்துடன் சேர்த்து, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் இந்தி திரைப்பட நடிகை வித்யா பாலன் தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது தமிழ் திரைப்பட நடிகை கவுதமி மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top