சனி கிரகத்தை ஆராய்ந்த காசினி விண்கலம் அடுத்த மாதம் தனது செயல்பாட்டை நிறுத்துகிறது

cassini_spacecraft_1502351088

 

ஒரு போதும் காணாத மூச்சு அடைக்கவைத்த விந்தையான சனி கிரகத்தின் அதிசய புகைப்படங்களை உலகிற்க்கு அளித்த, காசினி விண்கலம் 20 ஆண்டுகள் கழித்து தன்னுடைய செயல்பாட்டை அடுத்தமாதம் நிறுத்துகிறது.

மெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி கழகம் மற்றும் இத்தாலியா விண்வெளி கழகம் ஆகியவற்றால் 320 கோடி ரூபாய் பொருட்செலவில் 1997 ம் ஆண்டு அக்., 15ம் தேதி சனி கிரக ஆராய்ச்சிக்காக காசினி விண்கலம் தயாரித்து அனுப்பப்பட்டது.

காசினி விண்கலம், 2004ம் ஆண்டு ஜூலை மாதம் சனி கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் சேர்ந்தது. அன்று முதல், 12 ஆண்டுகளாக சனி கிரகம், அதன் வளையங்கள், டைட்டன் என பெயரிடப்பட்ட சனி கிரகத்தின் துணைக்கோள் குறித்து ஏராளமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை காசினி விண்கலம் பூமிக்கு அனுப்பி உள்ளது.

1502338095379   1502338095379 (1)

சனியின் ஈர்ப்பு விசை பூமியிலிருந்து அதிகம் வேறுபடவில்லை. சுமார் 1.17 மடங்கு அதிகமாக உள்ளது. பூமியில் 70 கிலோ எடையுள்ள ஒருவர் சனியில் 82 கிலோ இருப்பார். சூரியனில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் சனியின் சராசரி வெப்பநிலை மிக மிகக் குறைவு. காற்று மண்டலத்தில் அமோனியா உறைந்து போவதால், கோளின் மேற்பரப்பு முழுவதும் பனிப்பிரதேசமாகவே காணப்படுகிறது.

tmg-article_tall (1)

சனி கிரகத்தை சுற்றி வந்தபடி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள காசினி விண்கலம், தனது கடைசி பயணத்தின் போது புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது. காசினி விண்கலம் செயல்பாடு வரும் செப்., 15ம் தேதி முடிவுக்கு வருகிறது. தனது கடைசி பயணமாக, சனி கிரகம் மற்றும் அதன் வளையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் காசினி விண்கலம் செல்ல தொடங்கியது. விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சனிகிரகத்தின் வடகோள பகுதியில், 22 முறை வலம் வர உள்ள காசினி கிரகம் மேலும் பல புதிய தகவல்களை அனுப்பும் என நாசா எதிர்பார்க்கிறது. சனி கிரகத்தின் விந்தையான அதிசயங்கள் வெளிப்படுவதற்கு காரணமாக இருந்த காசினி விண்கலம் 20 ஆண்டுகள் கழித்து தனது செயல்பாடை அடுத்த மாதம் 15 ந்தேதி நிறுத்துகிறது .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top