டெல்லியில் எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர் செல்வமும் பிரதமர் மோடி முன்னிலையில் ஓன்று சேர வாய்ப்பு

வரும் 14ம் தேதி டிடிவி தினகரன் மேலூரில் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார்.

 

 

11-1502435252-dinakaran-021121-600

தினகரன் மேலூரில் பொதுக்கூட்டத்துக்குப் போகும்போது “சென்னைத் தலைமைக்கழகத்தில் சசிகலாவின் பேனர் கட்ட இருக்கிறோம். இதற்கு இடைஞ்சல் வந்தால், சும்மா வேடிக்கை பார்க்கமாட்டோம். தேர்தல் கமிஷன் தரப்பில் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று சொல்ல வாய்ப்பே இல்லை. ஏதோ ஆர்.டி.ஐ-யில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குத் தேர்தல் கமிஷன் அளித்த பதிலின் நடுவில் உள்ள சில வரிகளை மட்டும் உருவி எடப்பாடி அணியினருக்கு ஆதரவான வார்த்தைகளைப் போட்டு அதை மீடியாக்களில் பரப்பி வருகிறார்கள். தேர்தல் கமிஷனில் முழுப் பதிலை படித்தால், உண்மையைப் புரிந்துகொள்வீர்கள். இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதைத்தான் தேர்தல் கமிஷன் சொல்ல முடியும். கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடவே முடியாது. கருத்தும் தெரிவிக்க முடியாது. எங்களின் உட்கட்சி பிரச்னையில் தலையிட தேர்தல் கமிஷனுக்கு உரிமை இல்லை. பொதுச்செயலாளர் பதவியில் உள்ள சசிகலாதான் என்பதை வலியுறுத்தி கட்சியின் சட்ட விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தவிர மற்ற பதவிகளில் பிரச்னை வரும்போது, இது தொடர்பாக கருத்துச் சொல்ல நீதிமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. பொறுத்திருந்து பாருங்கள்.. அடுத்த சில நாள்களில் பல அரசியல் நிகழ்வுகள் கட்சியில் நடக்க உள்ளது” என்றார்.

 

இந்த பேட்டிக்கு பின் ஒரு தகவல் வருகிறது மேலூர் பொதுக்கூட்டத்துக்கு இன்னமும் போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை  என்று! தினகரன் ஆதரவாளர்கள் கொதித்து போய் இருக்கிறார்கள்

 

அதிமுகவில் நடக்கும்  பல்வேறு குழப்பங்களுக்கு இடையில்  அதிமுக துணைப் பொதுச் செயலாளராக, சசிகலாவால் நியமிக்கப்பட்ட தினகரன், கடந்த வாரம் தன்னிச்சையாக புதிய நிர்வாகிகளை அறிவித்தது, முதல்வர் பழனிச்சாமிக்கும், அவரின் ஆதரவு அமைச்சர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

 

,உடனே  அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் கூடி, தினகரனின் நியமனம் செல்லாது என்றும், அவரின் நிர்வாகிகள் நியமன அறிவிப்பு செல்லாது என்றும், அவரால் கட்சியை கட்டுப்படுத்த முடியாது என்றும் அறிவித்தனர். இதனால், இரு அணிகளுக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில்  முதல்வர் பழனிச்சாமி  ஓ.பன்னீர்செல்வத்துடன் சமரசம் பேசி துணை முதல்வர் பதவி கொடுத்து இருவரும் சேர்ந்து தினகரனை எதிர்க்கலாம் என் திட்டமிட்டுள்ளார். டெல்லியில் நடக்கவுள்ள துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் எடப்பாடி பழனிசாமி அங்கு வர இருக்கும்   ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து இருவரும் சேர்ந்து  பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளனர்.என செய்தி பரவுகிறது

டெல்லி பாஜக அரசும், ,தேர்தல் கமிசனும் சேர்ந்துக் கொண்டு அதிமுகவை  உடைக்க பார்க்கிறது அதற்கு ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடியும் கைகோர்த்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்கிறார்கள் இதை பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்கமாட்டோம்” என்று தினகரன் ஆதரவாளர் ஒருவர் கூறுகிறார்.அவர் மேலும் கூறும்போது “ஓ.பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் வரம்பு மீறி பாஜக பக்கம் சாய்ந்தால் நாங்கள் எங்களது ஆதரவு எம்எல்.ஏ வோடு கவர்னரை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றார்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top