ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் மம்தா பானர்ஜி திடீர் சந்திப்பு

 

201708102102320020_mamata-meets-president_SECVPF

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தார்.

 
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் நடத்தவுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று டெல்லிக்கு வந்தார்.

இந்நிலையில், டெல்லி ஜனாதிபதி மாளிகையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ராம்நாத் கோவிந்தை, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

இதுதொடர்பாக மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிடுகையில், ‘ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து, எனது இதயம் கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன். இது ஒரு அற்புதமான சந்திப்பாக அமைந்தது. விரைவில் கொல்கத்தாவுக்கு வருகை தரவேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top