என் மீது தேசத்துரோக வழக்கு போட எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை: கன்னையா குமார்

 

201708101954003317_No-ground-to-file-charge-sheet-against-me-Kanhaiya_SECVPF

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார் தன் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை என கூறியுள்ளார்
டெல்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக வளாகத்தில், கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் கூட்டத்தில், அப்சல் குருவைப் போற்றியும், இந்தியாவைத் தூற்றியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
குற்றச்சாட்டின் அடிப்படையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார் மற்றும் 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனையடுத்து, ஜாமீன்கோரி கன்னையா குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட், 6 மாத நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

6 மாத கால நிபந்தனை ஜாமீன் முடிவடைந்த பிறகு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கன்னையா குமார் மற்றும் உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகியோருக்கு நீதிமன்றம் நிபந்தனையற்ற வழக்கமான ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்நிலையில், மத்திய  பிரதேசம் மாநிலத்தில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் கன்னையாகுமார் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

என் மீது போடப்பட்ட தேசத் துரோக வழக்கிற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அப்படி இருந்திருந்தால் அவர்கள் ஏன் இன்னும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை? நான் என் தரப்பு நியாயத்தை நிரூபிக்க ஆதாரம் கொடுக்கவில்லை. சிலரது தவறான பிரச்சாரம் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த வழக்கு தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் மரணம் பற்றிய விவாதத்தில் இருந்து திசை திருப்பவே போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top