300 கோடிக்கும் மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்த “டெஸ்பாகிடோ” பாடல்

Luis-Fonsi-ft-Daddy-Yankee-–-Despacito

போர்ட்டோ ரிகோ பாடகர் லூயிஸ் போன்ஸி (Luis Fonsi) உடன் இணைத்து ரோம், காசோலினா, ஷாகி ஷாகி பாடல்கள் மூலம் புகழின் உச்சத்திற்குச் சென்ற டாட்டி யாங்கீ வெளியிட்ட பாடல் டெஸ்பாகிடோ. கடந்த ஜனவரி மாதம் 12ம் தேதியுனிவர்சல் மியூசிக் லத்தீன் நிறுவனம் வெளியிட்ட இந்த பாடல் விற்பனையில் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.

யூடில் -இல் பதிவேற்றப்பட்ட 204 நாட்களில் 300 கோடி முறைக்கும் மேல் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது டெஸ்பாகிடோ . 300 கோடிஹிட்ஸ் குவித்த முதல் யூடியூப் வீடியோ என்ற பெருமையையும் இப்பாடல் பெற்றுள்ளது.

பிரபல ராப் பாடகர்விஸ் கலிபா மற்றும் சார்பில் புத் இணைந்து பாஸ் அண்டு புரியஸ் படத்தின் 7ம் பாகத்திற்காக 2015 ஏப்ரலில் வெளியிட்ட சி யூ அகேன் பாடல் தான் யுடியூப் -ல் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக இருந்தது. தொடர்ந்து பார்வையாளர்களை ஈர்த்து வரும் அப்பாடல், டெஸ்பாகிடோ பாடலுக்கு பிறகு 300 கோடி பார்வையாளர்களை ஈர்த்த வீடியோ பாடல் என்ற சிறப்பை பெற்றுள்ளது.

ஸ்பானிஷ் வார்த்தையான “டெஸ்பாகிடோ” மெதுவாக என்ற அர்த்தத்தை குறிக்கும் சொல்லாகும். “மக்கள் அன்பில் மெதுவாக விழ அழைக்கும் போன்ற பாடலே டெஸ்பாகிடோ” என்று எரிக்கா எண்டர் (Erika Ender) கூறியுள்ளார். லூயிஸ் போன்ஸி (Luis Fonsi) உடன் இணைந்து இப்பாடலில் பணியாற்றிய எரிக்கா எண்டர் (Erika Ender) இப்பாடலை பற்றி கூறுகையில்: “முழு உலகமும் ஸ்பானிய மொழியில் பாடுவது மற்றும் நடனம் ஆடுகிறது. அது உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது இது லத்தீன் உலகத்திற்கான ஒரு வெற்றியாகும்” என்று அவர் தெரிவித்தார்.

இந்த பாடல் முழுக்க முழுக்க போர்ட்டோ ரிகோவின் சாமானிய மற்றும் உழைக்கும் மக்களின் தெருக்களில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பாடல்கள் உலக அளவில் பிரபலமடைந்ததை அடுத்து ஏழை மக்கள் வாழும் பகுதியான போர்ட்டோ ரிகோவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் செல்ல துடங்கியுள்ளார். இதன் மூலம் லத்தீன் அமெரிக்கர்களின் வழக்கை மற்றும் கலாச்சாரம் மற்றவர்களுக்கு தெரிய தொடங்கியுள்ளது.

1. Despacito – 3.05 Billion Views
2. See You Again – 3.02 Billion Views
3. Gangnam Style – 2.92 Billion Views
4. Sorry – 2.70 Billion Views
5. Uptown Funk – 2.59 Billion Views


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top