விவசாயிகள் போராட்டத்துக்கு இந்திய கம்யூ. ஆதரவு: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாடு விவசாயிகள் கோரிக்கைகளை, மத்திய , மாநில அரசுகள் ஏற்காமல், புறக்கணிக்கும் போக்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. ஜனநாயக முறையில் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடத்தில் நேரடியாக தெரிவித்தும், ஆர்ப்பாட்டம் , உண்ணாவிரதம், மறியல், மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் என பல்வேறு வடிவங்களில் போராடியும் கூட கோரிக்கை ஏற்கபடாமல் உள்ளன.

குறிப்பாக இவ்வாண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியின் கோரக் கொடுமையை தமிழ்நாடு அரசு, ஏற்று தமிழ்நாட்டை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.

ஆனால் வறட்சியின் பாதிப்பிலிருந்து விவசாயிகள் மீள்வதற்குரிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக விவசாயிகள் கடன் தள்ளுபடி அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம். 201617-ம் ஆண்டிற்கான பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கல், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை வழங்கல், காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக்குழு அமைத்தல், வறட்சி மற்றும் வார்தா புயல் பாதிப்பிற்கு மாநில அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்கல், விவசாயிகள் தங்கள் கால்நடைகளை விற்பதற்கான தடையை நீக்குதல்.

கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ 4000 ம் விலை விவசாய விளை பொருட்களுக்கு எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையை ஏற்று விலை நிர்ணயித்தல், விவசாய இடுபொருட்களுக்கும், கருவிகளுக்கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்தல் மின் இணைப்புக் கோரி காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடன் இணைப்பு வழங்கல், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கும் திட்டத்தை கைவிடல், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை கைவிடல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தி வரும் 16.08.2017 அன்று மாவட்ட தலைநகரங்களில் பெரும் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கூடி அறிவித்துள்ளது.

விவசாய சங்கங்கள் அறிவித்துள்ள இப்போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கும். விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top