20 ஓவர் கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம்!

icc t2020 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான சர்வதேச தரவரிசை பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய அணி 131 புள்ளிகள் பெற்று மீண்டும் முதல் இடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி 130 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் அணி மூன்றாமிடம் பிடித்துள்ளது. நான்காவது இடத்தில் தென்னாப்ரிக்க அணியும், ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியும் உள்ளன.

கடந்த 12 மாதங்களில் இந்திய அணி ஒரேயொரு 20 ஓவர் போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top