வைகோ, திருமுருகன் காந்தி சந்திப்பு

கடந்த 2 மாதத்துக்கு முன், சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு போலீசார் தடை விதித்தனர்.

thirumurugan_Gandhi_long_13071

போலீசாரின் தடையை மீறி, மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதற்காக  பேருந்து கண்ணாடியை  உடைத்ததாக பொய் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து போலீசார், அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதை தொடர்ந்து, 4 பேர் மீது. கடந்த மே 28ம் தேதி குண்டர் சட்டம்  போடப்பட்டது . இந்த கைதை எதிர்த்து திருமுருகன் காந்தி உட்பட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.   அதை விசாரித்த நீதிபதிகள், வரும் 30ம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் தர உத்தரவிட்டனர்.
இந்நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ, சிறையில் உள்ள திருமுருகன் காந்தியை சந்தித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top