ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி கர்நாடகா பாஜக எம்.பிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது; வைகோ

VAIKO_1016474f

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கோடானு கோடி பணம் கிடைக்கும் என்பதால்தான் அதனை நெடுவாசலில் கட்டாயப்படுத்துகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு பணம் கிடைக்கலாம். ஆனால் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் பாலைவனமாகிவிடும். மத்திய அரசு, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி ஒருவருக்கு கொடுத்துள்ளது. அதுவும் முக்கிய காரணம் என கூறினார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top