பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி; பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் கைது!

haryana-bjp-chief-759

அரியானா மாநில பா.ஜனதா தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது நண்பரான ஆஷிஷ் குமார் என்பவருடன் சேர்ந்து பெண் ஒருவரை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. காரில் சென்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் மகளை பின்தொடர்ந்து வழிமறித்து தொல்லை கொடுத்து உள்ளனர்  குடித்துவிட்டு இச்சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் அவர்களை போலீஸ் கைது செய்து பின் விடுவிக்கப்பட்டனர்

 

பராலா மற்றும் ஆஷிஷ் மீது இந்திய தண்டனை சட்டம், பிரிவு 354 டி (பின்தொடர்தல்) மற்றும் மோட்டார் வாகன சட்டம், பிரிவு 185 (மது அருந்திவிட்டு ஓட்டுதல் அல்லது போதையில் ஓட்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் அவர்கள் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே தனக்கு நேரிட்டது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள பாதிக்கப்பட்ட பெண் ‘அதிஷ்டவசமாக நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ஏதே ஒரு புதரில் கொலை செய்யப்படடில்லை’ என குறிப்பிட்டு உள்ளார்.

 

அன்று இரவு நடந்த சம்பவத்தை விவரித்து உள்ள பாதிக்கப்பட்ட பெண், சாலையில் கார் ஓட்டிய போது அவர்கள் தொடர்ந்து காரில் என்னை பின் தொடர்ந்தார்கள், சில நேரங்களில் என்னுடைய காரை இடிக்கும் வகையிலும், மறிக்கும் வகையிலும் வந்தார்கள். மறிக்க முயன்ற போது எப்படியே காரை நேர்த்தியாக ஓட்டி தப்பினேன். என்னுடைய கைகள் நடுங்கியது. நான் பயத்தில் உரைந்து இருந்தேன், என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டிய வண்ணம் இருந்தது. வீட்டிற்கு செல்வோமா என்று கூட எனக்கு தெரியாது. இதனையடுத்து போலீசுக்கு அழைப்பு விடுத்தேன், அவர்கள் எப்போது வருவார்கள் என்ற பயத்துடன் காரை ஓட்டினேன், என கூறிஉள்ளார்.

haryana-bjp-chiefs-son-vikas-barala_650x400_51501953478

ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்து உள்ள பேட்டியில், என்னுடைய காரை தொடர்ச்சியாக பின்தொடர்ந்தனர். என்னுடைய வழியை மறிக்க முயற்சி செய்தார்கள் மற்றும் என்னுடைய கார் கதவை திறக்கவும் முயற்சி செய்தார்கள். சரியான நேரத்திற்கு வந்த சண்டிகார் போலீசுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காவல் துறையினர் மட்டும் வந்து அவர்களை கைது செய்யவில்லை என்றால் என்னவேண்டும் என்றாலும் நடந்து இருக்கும் என கூறிஉள்ளார்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top