முலாயம், லல்லு, சரத்யாதவ் உருவாக்கும் பாரதிய ஜனதாவுக்கு எதிராக புதிய கூட்டணி!

 

201708061258081021_Mulayam-Singh-Lalu-Sharad-Yadav-plan-to-join-hands-for-a-new_SECVPF

பாரதீய ஜனதாவிற்கு எதிராக முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

 

பாரதீய ஜனதாவுடன் கூட்டணி என்ற நிதிஷ்குமார் முடிவால் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் சரத்யாதவ் அதிருப்தி அடைந்து தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.

 

இவ்விவகாரத்தில் நிதிஷ் குமாருக்கு எதிராக இறங்க ஏற்கனவே லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவை கேட்டுக் கொண்டார். சரத் யாதவும் டெல்லியில் முலாயம் சிங் யாதவுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது ஷிவ்பால் யாதவும் உடன் இருந்தார்.

 

புதிய கூட்டணியை உருவாக்க முலாயம்சிங் யாதவ், லல்லுபிரசாத் யாதவ், சரத்யாதவ் ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். பா.ஜனதாவுக்கு எதிராக இந்த கூட்டணியை உருவாக்கவும் முடிவு செய்துள்ளனர். தனியாக கூட்டணியை உருவாக்கும் இவர்கள் காங்கிரசுடன் இணைந்து பா.ஜனதாவுக்கு எதிராக இறங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

 

காங்கிரசுடன் கைகோர்ப்பது என்பதில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் சரத் யாதவ் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் இப்போது பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்டும் முலாயம் சிங் யாதவ் தயக்கம் காட்டுகிறார் என கூறப்படுகிறது.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top