கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் காலமானார் ; எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்தனர்

 

20710182c

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலத் தலைவர்களில் ஒருவரான கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் (60) நாகர்கோவிலில் நேற்று மாலை காலமானார்.

 

இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின்-  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநிலத் தலைவர்களில் ஒருவரான கவிஞர் ஹெச்.ஜி.ரசூல். BSNL ல் வேலை பார்த்துவந்தார் .தக்கலையில் வசித்து வந்த கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்.தமிழ்நாட்டு கவிஞர்களில் முக்கியமானவர் .இஸ்லாமிய சமூகத்தின் மதிப்பீடுகள் பலவற்றை தம் கவிதைகளில் படைத்தவர்.சமூக இழிவுகளை சாடி சிந்தனைமிக்க கவிதைகள்  எழுதியவர். பிற்போக்கு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் உத்வேகமாக இருந்தவர். இஸ்லாமிய பெண்களுக்கான சுதந்திரம் குறித்து கவிதை எழுதியதால், தனது கவிதைக்காக தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகமது ஜமாஅத் தால் ஊர்விலக்கம் செய்யப்பட்டார்.இது பெரும் சர்ச்சைக்குள் ஆனது ஆனால், அதை பெரியவிசயமாக எடுத்துக்கொள்ளாமல் தான் உண்டு தன்  கவிதை உண்டு என்று சமூக மாற்றத்திற்கான கவிதைகளை எழுத போய்விட்டார்.பெரும் எழுச்சியை ஏற்படுத்தும் அமைதியை அவரிடம் காணலாம்.அவர் மறைவு  தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்திற்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே பெரும் இழப்பு!

 

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மறைவுக்குப் பல்வேறு எழுத்தாளர்களும், சமூக ஆர்வலர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top