அஸ்வின் அபார பந்துவீச்சு முதல் இன்னிங்ஸில் இலங்கை 183 ரன்னுக்கு ஆல் அவுட்

ashwin-in-colombo_806x605_71501902129

கொழும்பில் நடைபெற்று வரும் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி சார்பில் புஜாரா, ரகானே சதமும் லோகேஷ் ராகுல், அஸ்வின், சகா மற்றும் ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்தனர். இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஹெராத் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இலங்கை அணி அஸ்வினிடம் தரங்கா, கருணரத்ன ஆகியோரை இழந்து ஆட்ட முடிவில் 50 ரன்கள் எடுத்தது. மெண்டிஸ் 16 ரன்களுடனும், சந்திமால் 8 ரன்களுடனும் இன்று (சனிக்கிழமை) ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்நிலையில், இன்று 3-ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணியினர் திணறி வந்தனர். மதிய உணவு இடைவேளையின் போது, இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிகபட்சமாக நிரோஷன் டிவெல்லா 51 ரன்களை எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 69 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை சாய்த்தார். ஷமியும், ஜடேஜாவும் தலா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

அஸ்வின் 26-வது முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 439 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், இலங்கைக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாலோ ஆன் கொடுத்தார். இதனால் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top